நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஜனையில் கோஷமிடும் போது முதலில் ஒரு நபர் 'சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என கோவிந்தனின் திருநாமத்தைச் சொல்வார். உடனே மற்றவர் அனைவரும் ''கோவிந்தா கோவிந்தா'' என கோஷமிடுவர்.
'சர்வத்ர' என்பதற்கு எல்லாக் காலத்திலும், எல்லா இடத்திலும் எனப் பொருள்படும். காணும் இடத்தில் எல்லாம் அந்த கோவிந்தனே நிறைந்திருக்கிறான். பசுக்களுடன் பரம்பொருளான மகாவிஷ்ணு உறவாடியதால் ஏற்பட்ட திருநாமம் கோவிந்தன். இப்பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் பாவம் தீரும்.