
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாற்கடலைக் கடைந்த போது எழுந்த விஷத்தில் இருந்து மிகுந்த உஷ்ணம் கிளம்பியது.
செய்வதறியாமல் தவித்த தேவர்கள் கருணைக்கடலான சிவனை நோக்கி ஓடினர். அவர்கள் மீது இரக்கப்பட்ட சிவன் தன் அருகில் இருந்த நண்பர் சுந்தரரிடம் பாற்கடலில் எழுந்த விஷத்தை திரட்டி தருமாறு கட்டளையிட்டார். அவரும் நாவல் பழம் போல விஷத்தை கருநீல உருண்டையாக உருட்டி வந்தார்.
அதை பெற்றுக் கொண்ட சிவன் விழுங்கி கழுத்தில் தாங்கிக் கொண்டார். இதைக் கண்ட தேவர்கள் 'ஆலால சுந்தரா' 'அற்புத சுந்தரா' எனக் கோஷமிட்டனர். விஷத்தைத் திரட்டி அற்புதம் நிகழ்த்தியவர் என்பது இதன் பொருள்.