
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சப்தரிஷிகளில் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி தவிர்த்த மற்ற ஆறு பெண்களும், சரவணப்பொய்கையில் முருகனை வளர்த்து ஆளாக்கினர். இவர்களை 'கார்த்திகைப் பெண்கள்' என்று குறிப்பிடுவர். இவர்கள் ஒருமுறை முருகனிடம் தங்களின் குறை தீர்க்குமாறு வேண்டிக் கொண்டனர்.
''முருகா! நாங்கள் தான் ஆறுமுகனான உன்னைப் பெற்றெடுத்ததாக சிலர் வதந்தியை பரப்பி விட்டனர். இதனை உண்மை என்று நம்பிய கணவன்மார்களான ரிஷிகள் எங்களை விட்டுப் பிரிந்தனர். இந்த இகழ்ச்சியை எங்களால் தாங்க முடியவில்லை. இக்குறை தீர நாங்கள் ஆறுபேரும் உன்னையே சுவீகார புத்திரனாக (தத்துப்பிள்ளை) ஏற்றுக் கொள்ள விரும்புகிறோம்'' என்றனர். முருகனும் அவர்களை தன் தாயாக ஏற்று அருள்புரிந்தார்.