நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஓம் என்னும் பிரணவ மந்திரத்தின் வடிவம் மயில் என்பதால் இதை 'மந்திர மயில்' என்பர். மயில் மீது முருகனை தரிசிப்பது 'குக ரகசியம்'.
பாம்பன் சுவாமிகள், 'கொணர்தி உன் இறைவனையே' என மயில் மீது பத்து பாடல்கள் பாடியுள்ளார். இதில் மயிலே... முருகனைச் சுமந்து வந்து எனக்கு காட்சி தருவாயாக என வேண்டுகிறார். இதை பாடினால் முருகனை தரிசிக்கும் பாக்கியம் உண்டாகும்.