நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நான்கு வழிச்சாலைகளில் விரைவாகவும், பாதுகாப்பாகவும் செல்வது போல, பிறவி என்னும் பயணம் இனிதாக அமைய சம்பந்தர், நாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் வழிகாட்டியுள்ளனர். இவர்கள் பாடிய தேவாரம், திருவாசகத்தைப் பாடினால் துன்பம் தீரும். 'நமசிவாய' 'சிவாயநம' என்னும் ஐந்தெழுத்து மந்திரங்களை ஜபிக்க பாவம் மறையும். இதையே 'சிவாயநம என்று சிந்தித்திருப்போருக்கு அபாயம் ஒருநாளும் இல்லை” என்கிறார் அவ்வையார்.