
* கருணையே வடிவமான கடவுள் யாருக்கும் சாபம் கொடுப்பதில்லை. தவறான வரங்களைக் கேட்டாலும் கொடுப்பதில்லை. யாருக்கு எப்போது எது தேவையோ அதை அப்படியே தருகிறார்.
* வாழ்வில் ஏற்படும் துன்பங்களுக்கு அவரவர் செய்த வினையே காரணம். நன்மை நடந்தால், 'என்னால் தான் நடக்கிறது' என ஆணவம் கொள்கிறார்கள். ஆனால் தீமை நடந்தால், 'தெய்வத்திற்கு கண் இருக்கா...எனக்கு ஏன் இந்த கஷ்டம்? நான் யாருக்கு என்ன பாவம் செய்தேன்? என புலம்புகின்றனர். ஒருவருடைய கெட்ட நேரம்தான் தெய்வத்தையே குறை சொல்ல வைக்கிறது.
* அகம்பாவம், ஆணவம், திமிர், மமதை, நான் என்னும் எண்ணம் இத்தீய குணங்கள் மனிதனை மயங்கச் செய்யும். இந்நிலையில் நல்லது எது, கெட்டது எது என்பது புரியாது.
* அகங்காரம் இருக்கும் இடத்தில் விவேகம் இருக்காது. விவேகம் இல்லாத இடத்தில் மகிழ்ச்சி மறையும். மகிழ்ச்சி இல்லாவிட்டால் அழிவு உண்டாகும்.
* நான் என்னும் எண்ணத்தை ஒழித்து தெய்வத்தை சரணடைந்தவருக்கு எல்லையற்ற மகிழ்ச்சி உண்டாகும். தெய்வத்தின் அருளால் இந்நாள் மட்டுமின்றி எல்லா நாளும் நல்ல நாளாக அமையட்டும்.