நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பஜனையில் பாடும் போது 'சர்வத்ர கோவிந்த நாம சங்கீர்த்தனம்' என ஒருவர் சொல்ல. மற்றவர்கள் ''கோவிந்தா கோவிந்தா'' என சொல்வர். 'சர்வத்ர' என்பதற்கு 'எல்லாக் காலத்திலும்', 'எல்லா இடத்திலும்' என்பது பொருள். எங்கும் அந்த கோவிந்தனே இருக்கிறான். பரம்பொருளான மகாவிஷ்ணு பசுக்களுடன் உறவாடியதால் ஏற்பட்ட நாமம் 'கோவிந்தன்' என்பதாகும். இப்பெயரைச் சொன்னாலும், கேட்டாலும் பாவம் போகும்.