நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அசுரனான கம்சனின் மாமனார் ஜராசந்தன். அவர் மருமகனான கம்சனை அழித்த கண்ணனைக் கொல்வதற்காக மதுராவின் மீது படையெடுத்தார்.
18 முறை தொடர்ந்து போர் தொடுத்ததால் மதுராவாசிகள் சிரமப்பட்டனர். இதனால் கண்ணன், மேற்கு கடற்கரையில் உள்ள தீவில் மக்களை குடியேறச் செய்தார். அங்கு 'துவாரகா' என்னும் நகரை உருவாக்கினார். குஜராத் மாநிலம் துவாரகையில் தான் புகழ்மிக்க கண்ணன் கோயிலான 'துவாரகா நாத்ஜி' உள்ளது.