நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணர் ஒருமுறை நாரத மகரிஷிக்கு உபதேசம் செய்தார். அப்போது, “உண்மையில் நான் வைகுண்டத்தில் வசிப்பதில்லை. என்னுடைய திருநாமத்தை எப்போதும் உச்சரிக்கும் பக்தர்களின் மனதில் வாழ்கிறேன்” என்றார்.
கலிசந்தரண உபநிஷத்தில் கூறப்பட்டுள்ள, “ஹரே கிருஷ்ண ஹரே கிருஷ்ண; கிருஷ்ண கிருஷ்ண ஹரே ஹரே; ஹரே ராம ஹரே ராம ; ராம ராம ஹரே ஹரே” என்னும் பதினாறு வார்த்தைகள் அடங்கிய கிருஷ்ணரின் திருநாமத்தை தினமும் 108 முறை உச்சரித்தால் தீமைகளில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழலாம். எல்லாவித துன்பங்களில் இருந்து விடுவிப்பதால் 'ஹரே கிருஷ்ண' மந்திரத்தை 'மகாமந்திரம்' எனச் சொல்வர். கிருஷ்ண ஜெயந்தியன்று இதைச் சொல்வது சிறப்பு.