
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வீட்டிலோ, பணியிடத்திலோ அறிந்தோ, அறியாமலோ பொறாமைக்காரர்கள் முளைத்து விடுகின்றனர். காலப்போக்கில் இவர்கள் எதிரிகளாக கூட மாறி விடுகின்றனர்.
'யாருக்கும் நான் கெடுதல் நினைக்கலே! ஏன் எனக்கு மட்டும் எதிரிகள் இருக்கிறார்கள்?' என வருந்துவோர் பலர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நரசிம்மரை வழிபடுவது நல்லது. சனிக்கிழமையன்று 12 முறை சன்னதியை வலம் வந்து வணங்குங்கள். துளசி மாலை சாத்தி, கல்கண்டு பிரசாதம் நைவேத்யம் செய்யுங்கள். நரசிம்மர் படத்தை கிழக்கு நோக்கி வைத்து மாலையில் வீட்டில் விளக்கேற்றி 'லட்சுமி நரசிம்மம் சரணம் ப்ரபத்யே' என 108 முறை ஜபியுங்கள். பொறாமைக்காரர்களின் தொல்லையில் இருந்து விடுதலை கிடைக்கும்.