நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தன் கணவர் குழந்தையாக இருந்த போது எப்படி இருந்தார் என அறிய ருக்மணி ஆசைப்பட்டாள். அதனால் தேவலோக சிற்பியான விஸ்வகர்மா மூலம் கிருஷ்ணர் சிலை ஒன்றைச் செய்தாள். அச்சிலையே கர்நாடக மாவட்டம் உடுப்பி கோயிலில் மூலவராக உள்ளது. ஒரு கையில் தயிர் கடையும் மத்தும், மற்றொரு கையில் வெண்ணெய் ஏந்தியபடி குழந்தையாக இருக்கிறார். இக்கோயிலின் கருவறையின் வாசல் விஜயதசமியன்று மட்டும் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஜன்னல் வழியாக மட்டுமே சுவாமியை தரிசிக்கலாம்.