நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ணர் பிறந்ததும் அவரது வளர்ப்புத் தந்தையான நந்தகோபர், 'ஜாதகர்மம்' என்னும் ஜாதகம் கணிக்கும் சடங்கை நடத்தினார். அதில் பங்கேற்ற கோபியர்கள் மஞ்சள் பொடி, பால், தயிர், வெண்ணெய், நெய் ஆகியவற்றை ஒருவர் மீது ஒருவர் வாரியிறைத்து மகிழ்ந்தனர்.
இதன் அடிப்படையில் உத்தரபிரதேசம், உத்ராஞ்சல், குஜராத் மக்கள் கிருஷ்ண ஜெயந்தியன்று 'நந்தோற்ஸவம்' என்னும் நிகழ்ச்சியில் ஆடிப்பாடி மகிழ்வர்.