நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருவாரூர் மாவட்டத்தில் கண்ணனின் பெயரால் அமைந்த ஊர் திருக்கண்ணமங்கை. இங்கு சுவாமிக்கு 'பத்தராவிப் பெருமாள்' என்று பெயர்.
பக்தர்களின் அன்பைப் பெற ஆவி போல விரைந்து வருவதால் இப்பெயர் பெற்றார். பக்தர்கள் மீது குழந்தைபோல அன்பு காட்டுவதால் 'பக்தவத்சலன்' என்றும் பெயருண்டு. தேவர்கள் தேனீக்களாக உருவெடுத்து வந்து பெருமாளை வணங்கினர். தாயார் சன்னதியில் இப்போதும் தேன்கூடு காணப்படுகிறது. இத்தலத்தில் ஒருநாள் தங்கியிருந்து பெருமாளை வழிபட்டால் மோட்சம் கிடைக்கும்.