நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பக்த மீரா சிறுமியாக இருந்த போது துறவி ஒருவர் கிருஷ்ணர் சிலை ஒன்றைக் கொடுத்தார். வாழ்வின் இறுதிவரை பாடி அதை வழிபட்டாள்.
மேவார் நாட்டு மன்னரான போஜராஜனை திருமணம் புரிந்தாள். ஆனாலும் கிருஷ்ண பக்தியில் அதிக நேரம் செலவிட்டாள். வஞ்சகர் சிலர் சூழ்ச்சியுடன் பிரசாதம் எனச் சொல்லி விஷம் கலந்த பாலைக் கொடுத்தனர். அப்போது துவாரகை கிருஷ்ணரின் சன்னதி தானாகவே மூடியது. அக்கோயிலை மீரா அடைந்ததும் சன்னதிக் கதவு தானாக திறந்தது. கீதங்களைப் பாடியபடியே கிருஷ்ணரோடு ஐக்கியமானாள்.