நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கிருஷ்ண ஜெயந்தியன்று குழந்தை கண்ணனை வரவேற்கும் விதத்தில் மாக்கோலமிடுவது சிறப்பு. கண்ணனை வீட்டுக்குள் வரவழைக்க வாசல் முதல் பூஜையறை வரை பாதங்களை அரிசிமாவால் வரையுங்கள். மாலை 5:30 - 7:30 மணிக்குள் விளக்கேற்றி பால், தயிர், வெண்ணெய், சீடை, முறுக்கு, நாவல்பழம், அவல் பிரசாதங்களை படைத்து, 'ஓம் நமோ பகவதே வாசுதேவாய' என்னும் மந்திரத்தை 108 முறை சொல்லி தீபாராதனை காட்டுங்கள். பாகவத புராணத்தில் இடம் பெற்றுள்ள கண்ணன் வரலாறான 'தசம ஸ்கந்தம்' பகுதியை படியுங்கள். இதனால் புத்திரதோஷம் விலகும். அழகும், அறிவும் மிக்க குழந்தைகள் பிறப்பர்.