ADDED : ஆக 22, 2024 05:44 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயர்பாடி மக்கள் தங்களின் தலைவர் நந்தகோபரின் வீட்டில் கண்ணன் பிறந்ததை அறிந்து வாத்தியங்களை இசைத்தனர். அந்தணர்கள் யாகம் வளர்த்து வேத மந்திரங்களை ஓதினர். மாட்டுக் கொட்டகை, வாசல், வீதி எங்கும் கோபியர்கள் கோலமிட்டனர். மஞ்சள், செஞ்சூரணத்தால் ரங்கோலி வரைந்தனர்.
வாசனை திரவியங்களைப் பூசியும், பன்னீர் தெளித்தும் ஆடிப் பாடினர். பசுக்கள், கன்றுகளுக்கு பூமாலைகளைச் சூட்டினர். வீடெங்கும் மாவிலை தோரணங்களால் அலங்கரித்தனர். பலவிதமான காதணி, கழுத்தணி, முத்துக்கம்மல், அட்டிகைகளை அணிந்தபடி நந்தகோபரின் மாளிகைக்கு விரைந்தனர். ''வசுதேவ் கிருஷ்ணா! எங்களின் அன்புச் செல்வமே! எங்களைக் காத்தருள வேண்டும்” என பிரார்த்தனை செய்தனர். நந்தகோபரும், யசோதையும் பொன், பொருள், ஆடை, பசுக்களை தானமாக கொடுத்தனர்.