
சிதம்பரம் கோயிலுக்குச் சென்ற ஏழை புலவர் ஒருவர், ''சிதம்பரம் பொற்சபையில் ஆடும் நடராஜனே! மெல்லிய ஆடை குளிரைத் தாங்குமோ? தாங்காது. சந்தையில் செல்லாத காசும் செல்லுமோ? செல்லாது. அதுபோல மூர்க்க குணம் கொண்டவர்களுக்கு நல்லதைச் சொன்னாலும் புத்தி வருவதில்லை'' எனக் குறையை வெளிப்படுத்தினார்.
அடுத்ததாக அம்மன் சன்னதிக்குச் சென்றார். '' சிவகாமித்தாயே! உன் மகன் முருகனுக்கு வேல் கொடுத்தாய். மணநாளன்று அம்மி மிதிக்க உன் மணவாளருக்கு கால் கொடுத்தாய். திருஞான சம்பந்தருக்கு பால் கொடுத்தாய்.
உலகையே ஆட்டிப் படைக்கும் மன்மதனுக்கு செங்கோல் கொடுத்தாய். இத்தனையும் கொடுத்த நீ எனக்கு ஏதும் தரவில்லையே!'' என வருத்தமுடன் பாடினார்.
உடனே அங்கிருந்த பஞ்சாட்சர படிகளில் புலவருக்கு ஐந்து தங்கக்காசுகளை வைத்து மறைந்தாள். இதன்பின் அவருக்கு 'படிக்காசு புலவர்' எனப் பெயர் ஏற்பட்டது.