
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சண்முகர் கோயிலில் பிரம்மாவின் புத்திரரான நாரதர் உற்ஸவராக இருக்கிறார். பிரம்மாவின் ஆணவத்தை அடக்குவதற்காக அவரது ஒரு தலையை கொய்தார் சிவன். அப்போது நாரதர் தன் தந்தை தவறு செய்யவில்லை என வாதம் செய்யவே சிவ நிந்தனைக்கு ஆளாக அவரது வீணை வளைந்தது.
பின்னர் விராலிமலை முருகப்பெருமானை வழிபட்டு விமோசனம் பெற்றார். இங்கு திருவிழாவின்போது முருகனுடன் இவரும் வீதியுலா வருவது சிறப்பு.