
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோயில்களில் அமர்ந்த நிலையில் காட்சி தரும் நந்தி, திருவாரூர் தியாகராஜர் கோயிலில் நின்ற கோலத்தில் உள்ளது. ஏன் தெரியுமா?
சிவபெருமானின் நண்பருமான சுந்தரருக்காக அவரது காதலியிடம் துாது சென்றார் சிவன். அப்போது தன் வாகனமான நந்தி மீது செல்லாமல் நடந்தே போனார். இதன் பின் யாருக்காகவும், எதற்காகவும் சிவனை நடக்க விடுவது கூடாது என்றும், அவர் அழைத்தால் உடனே புறப்படவும் தயாராக இருக்க வேண்டும் என இங்கு நின்ற நிலையில் காட்சியளிக்கிறது. நந்தியை தரிசித்தால் தடை அகலும். நினைத்தது நிறைவேறும்.