
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
19 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன விநாயகர், கோயம்புத்துார் புலியகுளத்தில் இருக்கிறார். ராகு காலத்தில் இவரை வழிபட்டால் கஷ்டம் விலகும்.
முந்தி விநாயகர் என்னும் இவரின் கைகளில் தந்தம், அங்குசம், பாசக்கயிறு, பலாப்பழம் உள்ளன. அமிர்த கலசத்தை துதிக்கையிலும், வாசுகி பாம்பை வயிற்றிலும் தாங்கியுள்ளார். இடது காலில் பத்ம சக்கரம் உள்ளதால் செல்வ வளம் தருகிறார். தமிழ்ப்புத்தாண்டு அன்று 3டன் எடையுள்ள பழ அலங்காரமும், விநாயகர் சதுர்த்தி அன்று 3 டன் எடையுள்ள பூக்களால் ஆன ராஜ அலங்காரமும் செய்வர்.
எப்படி செல்வது: கோயம்புத்துார் காந்திபுரம் பஸ் ஸ்டாண்டில் இருந்து 5 கி.மீ.,
நேரம்: அதிகாலை 5:30 -1:00 மணி
தொடர்புக்கு: 0422 - 231 3822