
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நீங்கள் கேட்ட வரத்தை சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டி கற்பக விநாயகர் தருவார்.
1600 ஆண்டுகள் பழமையான இக்கோயில் மகேந்திரவர்ம பல்லவனால் கட்டப்பட்டது. வலது கையில் சிவலிங்கம் வைத்தபடி ஆறடி உயரத்தில் கம்பீரமாக காட்சி தரும் இவர் கற்பக விருட்சம் போல வரம் தருவதால் 'கற்பக விநாயகர்' எனப்பட்டார். விபூதி அபிஷேகத்தின் போது இவரை தரிசித்தால் திருமணத்தடை விலகும். தலவிருட்சமாக மருத மரம் இருப்பதால் இங்குள்ள சிவனுக்கு 'மருதீசர்' என்று பெயர்.
எப்படி செல்வது: திருப்புத்துார் - குன்றக்குடி செல்லும் வழியில் 8 கி.மீ.,
நேரம்: காலை 6:00 - 12:00 மணி;மாலை 4:00 - 8:00 மணி
தொடர்புக்கு: 0457 - 726 4240