
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உங்கள் பொருள் திருட்டு போனதா... அதனால் கஷ்டத்தில் இருக்கிறீர்களா... கவலை வேண்டாம். தேனி பெத்தாட்சி விநாயகர் இருக்கிறார்.
பலஆண்டுக்கு முன்பு இங்கு வாழ்ந்தவர் பெத்தாட்சி. இவர் இங்குள்ள விநாயகரை தினமும் வழிபட்டார். அவரது காலத்திற்குப் பின் அந்த விநாயகர் சிலை திருடு போனது. அதனால் வேறொரு சிலையை பிரதிஷ்டை செய்து அவளின் பெயரிலேயே விநாயகரை அழைத்தனர். இதற்கிடையில் திருடு போன சிலையும் கிடைத்தது. தற்போது இங்கு இரண்டு விநாயகர் சன்னதி உள்ளது. இருவரையும் தரிசிப்பது சிறப்பு.
எப்படி செல்வது: தேனி பஸ் ஸ்டாண்டில் இருந்து பெரிய குளம் சாலையில் 1கி.மீ.,
நேரம்: அதிகாலை 4:30 -- 10:30 மணி; மாலை 4:00 -- 8:30 மணி
தொடர்புக்கு: 99948 77505