
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கங்கை, யமுனை நதிகள் மகாவிஷ்ணுவின் சம்பந்தம் பெற்றிருப்பதை எண்ணி கண்டகி நதி வருந்தினாள். இதை தெரியப்படுத்த தவத்தில் ஈடுபட்டாள். காட்சியளித்த மகாவிஷ்ணு தன் அம்சமான சாளக்கிராம கல் கண்டகி நதிக் கரையில் உற்பத்தியாகும் என வரம் கொடுத்தார்.
வஜ்ரகிரீடம் என்னும் பூச்சியின் வடிவம் கொண்டு சாளக்கிராம கல்லைக் குடைந்து அதன் கர்ப்பத்தை அடைந்தார் மகாவிஷ்ணு. இக்கற்கள் விஷ்ணு, நாராயண, நரசிம்ம, வாமன, கிருஷ்ண அம்சத்துடன் பலவித சுருள் ரேகைகள், சக்கரங்கள் கொண்டதாக இருக்கும்.
நேபாளத்தில் உள்ள ஹரிபர்வத மலையில் பாயும் சக்கர தீர்த்தத்தில் கண்டகி நதி உற்பத்தியாகிறது. இதன் கரையில் சாளக்கிராம கற்கள் அதிகளவில் இருக்கும் இப்பகுதிக்கு 'சாளக்கிராமம்' என்றே பெயர்.