ADDED : செப் 27, 2024 01:20 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருமலைநாயக்கர் மதுரையை ஆண்ட போது ராயசம் என்னும் அரசுப்பதவி வகித்தவர் அழகிய மணவாளதாசர். இவருக்கு பிள்ளைப்பெருமாள் அய்யங்கார் என்றும் பெயருண்டு. இவர் வேங்கடேசர் மீது பாடியவை திருவேங்கடத்தந்தாதி, திருவேங்கடமாலை. இவர் பாடிய சூழ்நிலை சற்று விநோதமானது.
ரங்கநாதரின் பக்தரான இவர் ஸ்ரீரங்கம் தவிர்த்த வேறெந்த பெருமாளையும் வணங்குவதில்லை என்ற விரதத்தில் இருந்தார். அதோடு மட்டுமின்றி ஒரு சந்தர்ப்பத்தில், 'அரங்கனைப் பாடிய வாயால் குரங்கனைப் பாடமாட்டேன்' என வெங்கடேசரை பழித்தும் பேசினார். இந்நிலையில், மணவாளதாசருக்கு கண்டமாலை என்னும் நோய் வந்தது. மனம் வருந்தியவராக ஏழுமலையானின் திருவடியைச் சரணடைய நோய் மறைந்தது. அதன் பின் ஏழுமலையான் மீது அந்தாதி, மாலை என்னும் பாடல்கள் பாடினார்.