ADDED : நவ 07, 2024 09:34 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
முருகனின் படை வீடுகள் திருப்பரங்குன்றம், திருச்செந்துார், பழநி, சுவாமிமலை, திருத்தணி, சோலைமலை ஆகியவை. பழநி மூன்றாம் இடத்தைப் பெறுகிறது. மற்ற படை வீடுகளில் ஒரு முருகன் கோயில் மட்டுமே உள்ளது. பழநியில் மட்டும் இரண்டு கோயில்கள் உள்ளன.
அடிவாரத்தில் உள்ள முருகன் கோயில் பற்றி நக்கீரர் பாடியுள்ளார். இதை 'ஆதி கோயில்' (முதலில் தோன்றியது) என்பர். மலைக்கோயில் முருகனை திருப்புகழில் அருணகிரிநாதர் வர்ணிக்கிறார். 'அதிசயம் அநேகமுற்ற பழநி' என்று அவர் சொல்வதில் இருந்து, இங்குள்ள நவபாஷாண மூலவர் சிலை உள்ளிட்ட விஷயங்களை அறிய முடிகிறது.