ADDED : நவ 14, 2024 02:02 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பசி என்னும் கொடுமை எதிரிக்கும் வரக்கூடாது என்பார்கள். பசித்தவருக்கு உணவளிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் பண்பாடே விருந்தோம்பல்.
எல்லா உயிர்களுக்கும் குறைவின்றி உணவு கிடைக்க வேண்டும் என்பதற்காக அம்பிகையே அன்னபூரணியாக அருள்கிறாள். கையில் அன்ன பாத்திரமும், கரண்டியுமாக இவள் காட்சியளிக்கிறாள். கேரளாவில் செருக்குன்னம் என்னும் ஊரிலுள்ள அன்னபூர்ணி கோயிலில் உணவே பிரசாதமாக தரப்படுகிறது.
இங்கு அர்த்தஜாம பூஜை முடிந்ததும் வாசலில் உள்ள மரத்தில் சோற்றை மூடையாகக் கட்டி வைப்பர். இரவில் பசியோடு வருபவர் திருடனாக இருந்தாலும் பசியாற வேண்டும் என்பதே இதன் நோக்கம்.