நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மனிதனுக்கு இரண்டு விதமான அன்னங்கள் தேவை என்கின்றனர் ஞானிகள். ஒன்று உடலை வளர்க்கும் உணவு என்னும் அன்னம், மற்றொன்று உயிரை வளர்க்கும் பக்தி என்னும் அன்னம். உணவை மட்டும் சாப்பிட்டு உலக விஷயங்களில் ஈடுபட்டால் வாழ்வு அர்த்தமற்றதாகி விடும். பக்தியால் எண்ணம் துாய்மை பெறும். ஆத்மபலம் உண்டாகும். வாழ்வின் இறுதியில் மோட்சம் என்னும் வீடுபேறு கிடைக்கும்.