
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கண்ணனின் பக்தரான கபீர்தாசர் தன் குடிலில் தியானம் செய்து கொண்டிருந்தார். வெகு நேரத்திற்கு பிறகு கண் விழித்த அவர் எதிரில் தன் குருநாதர் அமர்ந்திருப்பதைக் பார்த்தார்.
குருநாதருக்கு சற்று தொலைவில் கண்ணன் குழந்தை வடிவில் சிரித்தபடியே தவழ்ந்து வந்தான். முதலில் யாரை வணங்குவது என கபீர்தாசர் யோசித்தார்.
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பதில் மாதா - பிதாவையும், பிதா - குருவையும், குரு - தெய்வத்தையும் காட்டினார். அந்த வரிசையில் இங்கு முதலில் இருப்பவர் குரு. எனவே, குருவையே முதலில் வணங்க வேண்டும் என எழுந்தார். என்ன ஆச்சர்யம்... குரு இருந்த இடத்தில் குட்டிக்கண்ணன் அமர்ந்திருந்தான். குருவும் தெய்வமும் ஒன்று என்பதை உணர்ந்தார் கபீர்தாசர்.