
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
மகாபலிசக்ரவர்த்தி, பரசுராமர், விபீஷணன், அனுமன், மார்க்கண்டேயர், வியாசர்,
அஸ்வத்தாமன் ஆகியோர் என்றும் வாழும் ஏழு சிரஞ்சீவிகள். கோயிலில் சுவாமி தரிசனம் முடிந்ததும், சிறிது நேரம் அமர்ந்த பிறகே நாம் வீட்டிற்கு புறப்பட வேண்டும். அப்போது ஏழு சீரஞ்சிவிகளின் அருளும் கவசம் போல நம்முடன் துணையாக நிற்கும். வீட்டிற்கு வந்ததும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அப்போது நம் வேண்டுதல்களை நினைத்தால் 'அது அப்படியே ஆகட்டும்' என சிரஞ்சீவிகள் ஆசீர்வதிப்பர். அத்துடன் குலதெய்வம், இஷ்ட தெய்வத்தையும் வழிபடுவது மிக அவசியம்.