
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சுருக்கமாக எழுதப்பட்ட நுாலுக்கு பெருமை அதிகம். உதாரணம் திருக்குறள். இது பற்றி கிருபானந்த வாரியாரிடம் கேட்ட போது என்ன சொன்னார் தெரியுமா...
ஆயிரம் முத்துக்கள் கோர்க்கப்பட்ட இரண்டு முத்துமணி மாலைகள் இருந்தன. முத்துக்கள் அசைந்தால் ஒளிவிடும், அழகாக இருக்கும் என எண்ணி ஒரு நபர் ஒவ்வொரு முத்தாக அசைத்துப் பார்த்தார். இன்னொருவர் முத்துக்களின் ஊடேயுள்ள நுாலினைப் பிடித்து அசைத்தார்.
எல்லா முத்துக்களும் அசைந்து ஒளியைச் சிந்தின. ஒவ்வொரு முத்தாக அசைப்பதை விட நுாலைப் பிடித்து அசைத்தவரே புத்திசாலி. இருவரும் ஒரே வேலையைச் (மாலையை அசைத்தல்) செய்தாலும் நுாலை அசைத்தவரே கெட்டிக்காரர்.
அதுபோல சுருக்கமாக எழுதிய நுால்களே புகழ் பெற்றன.