
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயிர்களை படைக்கும் தொழிலைச் செய்பவர் பிரம்மா. காக்கும் தொழிலை செய்பவர் மகாவிஷ்ணு. இவர்கள் இருவரும் 'நானே பெரியவன்' என கர்வம் கொண்டனர்.
இதை அடக்க சிவபெருமான் ஜோதிப்பிழம்பாகத் தோன்றி, 'அடியையும்,(கால்கள்) முடியையும்(தலை) யார் பார்க்கிறீர்களோ அவரே பெரியவர்' எனத் தெரிவித்தார். ஜோதியின் முடியைக் காண அன்னப்பறவையாக மாறிய பிரம்மா வானுலகம் நோக்கிச் சென்றார். சுவாமியின் அடியைக் காண வராக (பன்றி) அவதாரம் எடுத்து பாதாள லோகம் சென்றார் மகாவிஷ்ணு. ஆனால் இருவராலும் சுவாமியை நெருங்கக் கூட முடியவில்லை.
சிவபெருமானே முழுமுதற்கடவுள் என்ற உண்மையை இருவரும் உணர்ந்தனர். அந்த நாளை திருக்கார்த்திகையாக கொண்டாடுகிறாம். திருவண்ணாமலையில் மகாதீபம் ஏற்றி ஜோதிப்பிழம்பாக சிவனை வழிபடுகிறோம்.