ADDED : டிச 20, 2024 10:50 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
'சும்மா இருந்தால் சோற்றுக்கு கஷ்டம்; சோம்பல் வளர்ந்தால் ஏற்படும் நஷ்டம்' என்றொரு பாடல் உண்டு. இந்த நிலை வராமல் இருக்க ஏதாவது வேலை செய்து சம்பாதிக்க வேண்டும். சிலருக்கு வியாபரம் என்பது பிடித்தமாக இருக்கும்.
பொதுவாக எந்த தொழிலாக இருந்தாலும் நல்ல வேலையாட்கள் அமைய வேண்டும். இதுபோல் தொழில் செய்ய விரும்புகிறீர்களா... இல்லை தொழிலில் முன்னேற வேண்டுமா... விநாயகர், அனுமனின் அருளை நாடுங்கள். சதுர்த்தியன்று விநாயகருக்கு அருகம்புல் மாலையைச் சாத்துங்கள். தடைகள் விலகும். ஒவ்வொரு சனிக்கிழமையும் அனுமனுக்கு விளக்கு ஏற்றுங்கள். சஞ்சீவி மலையைத் துாக்கி வந்தது போல் உங்களின் சுமையை அவர் துாக்கிக் கொண்டு சுகமாக வாழ வைப்பார்.