நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சல்லடையில் தண்ணீர் நிரப்ப முடியுமா... அதெப்படி. சல்லடை ஓட்டையாக இருக்கும். அதில் தண்ணீர் ஊற்ற ஊற்ற ஓட்டை வழியாக வழியுமே... ஆனால் துறவிகளிடம் கேட்டால் சல்லடையில் தண்ணீர் நிரப்ப முடியும் என்கிறார்கள்.
நீர் நிறைந்த பாத்திரத்தில் சல்லடையை மூழ்க வைத்தால் அதில் தண்ணீர் நிரம்பி இருக்கும். அது போலத்தான் பக்தியும். நம் மனம் சல்லடை மாதிரி. அதில் பக்தியை நிரப்புவது என்பது எளிதல்ல. முதலில் ஆசைகள், எண்ணச்சிதறல்கள் போன்ற துவாரங்களின் வழியே அது வழிந்து விடும். எனவே கடவுள் என்னும் நீர் நிறைந்த பாத்திரத்தில் மனம் என்ற சல்லடையை மூழ்க வையுங்கள். பக்தி நிறைந்திருக்கும்.