நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஏகாதசியன்று காலையில் பூஜை செய்து விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பகல் மட்டும் அல்லாமல் அன்று இரவு முழுவதும் புராண நுால்களை படிப்பது, திருமாலின் பெயர்களைச் சொல்வது நல்லது.
மறுநாள் துவாதசியன்று அதிகாலையில் உப்பு, புளிப்பு சேர்க்காமல் உணவு தயாரிக்க வேண்டும். அதில் சுண்டைக்காய், நெல்லிக்காய், அகத்திக்கீரை இடம் பெறுவது அவசியம். சமைத்த உணவை 'கோவிந்தா... கோவிந்தா... கோவிந்தா...' என மூன்று முறை கூறி ஏழைகளுக்கு தானம் அளிக்க வேண்டும். பின்னர் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம். 8 வயதிற்கு உட்பட்டவர்களும், 80 வயதிற்கு மேற்பட்டவர்களும் ஏகாதசி விரதம் இருக்க வேண்டிய அவசியமில்லை.