நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வைகுண்ட ஏகாதசியன்று அதிகாலையில் பெருமாள் கோயில்களில் உற்ஸவர் சயன கோலத்தில் அருள்பாலிப்பார். அவரது பாதகமலங்களை பிடித்தபடி தாயார் அமர்ந்திருப்பார். சுற்றிலும் ஆழ்வார்கள் எழுந்தருளியிருப்பர். பெருமாளை இப்படி தரிசித்தால் சுகமான வாழ்வு அமையும்.
மாலை வரை இந்த கோலத்தில் பெருமாளை தரிசிக்கலாம். ஆனால் ஸ்ரீரங்கத்தில் சயன கோலத்தில் மூலவர் இருப்பதால் உற்ஸவரை நின்ற கோலத்தில் தரிசிக்கலாம்.