நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காசினி இருளை நீக்கும்
கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்றப் புசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசி ஏழுடைய தேர் மேல்
மாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய் செங்கதிரவனே போற்றி.
உலகத்தின் இருளைப் போக்குபவரே. எங்கும் கதிர்களைப் பரப்பி ஒளி தருபவரே. பூலோகம், தேவலோகத்தில் வசிப்பவர்களால் போற்றப்படுபவரே. வணங்குவோருக்கு சுகம் அளிப்பவரே. ஏழு குதிரைகள் பூட்டப்பட்ட தேரின் மீது மேருமலையை வலம் வருபவரே. சிவந்த நிறமுடைய சூரியனே. உம்மை வணங்கும் என்னைக் காத்தருள வேண்டும்.