ADDED : பிப் 13, 2025 11:33 AM

வில்லது ஏந்தி வந்தாய்,
வன்பகை தன்னை வென்றாய்,
கல்லது பெண்ணைச் செய்தாய்,
கனிந்த தோர் அன்பில் நின்றாய்,
வில்லது வளைத்து அங்கே,
மிதிலையின் மகளை மணந்தாய்,
சொல்லது ஒன்றே என்றாய்,
தந்தையின் வாக்கு ஏற்றாய்,
தம்பிக்கு தேசம் தந்தாய்,
தியாகமே உருவாய் ஆனாய்,
பஞ்சென பாதம் அமைந்த,
நங்கையாம் சீதையுடனே,
தம்பியாம் இலக்குவன் தொடர,
கடுவனம் விரும்பிப் புகுந்தாய்,
ராவணன் கவர்ந்து சென்ற,
பைங்கொடி சீதை தன்னை,
அஞ்சனை மைந்தன் துணையால்,
செருவென்று மீட்டு வந்தாய்,
சிவனவன் பாதம் தொழுது,
சிந்தையில் மகிழ்வு கொண்டு,
அயோத்தி மீண்டு வந்து,
பட்டத்து அரசனானாய்,
பார்புகழ் சீதாராமா...!
பரிவுடை பரந்தாமா...!
சீருடன் எம்மைக் காப்பாய்,
சிந்தையைத் தெளியச் செய்வாய்,
கார் பொழி வெள்ளம் போலக்,
கருணையும் மிகுத்துத் தருவாய்...!
பூஜை அறையில் தீபம் ஏற்றிப் படித்து வந்தால் ராமாயணம் முழுவதும் படித்து முடித்த பலனைப் பெற்றுச் சிறக்கலாம்.