
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜராஜ சோழனைப் போல அவரது மகன் ராஜேந்திர சோழனும் சிறந்த சிவபக்தராக இருந்தார். திருவாரூரை சேர்ந்த பரவை என்ற நாட்டிய பெண் மீது காதல் கொண்டார். சிவபக்தையான அவளுக்காகவே திருவாரூர் கோயிலின் விமானம், கருவறை முழுவதும் தங்கத்தால் வேய்ந்தார். இச்செய்தியை,
'உடையார் வீதிவிடங்க தேவர் குடத்திலும் வாய்
மாடையிலும் நாலு நாசியிலும் உள் குடத்திலும் பொன்வேய்ந்தான்'
என்கிறது இங்குள்ள கல்வெட்டு. அந்நிய படையெடுப்பின் போது இந்த தங்கம் அனைத்தும் கொள்ளை அடிக்கப்பட்டன.