
அறிந்தோ, அறியாமலோ முற்பிறவிகளில் நாம் செய்த பாவங்களே இப்பிறவியில் ஏற்படும் துன்பங்களுக்கு காரணம்.
நாம் செய்த தவறுகளுக்கு ஏற்ப துன்பங்கள் ஏற்படுகின்றன. கடன், நிம்மதியின்மை, தம்பதி ஒற்றுமையின்மை, நோய், குழந்தைகளால் கவலை, சகவாச தோஷம் என பலவித துன்பங்கள் வாழ்வில் ஏற்படுகின்றன. இதற்கான சக்தி வாய்ந்த பரிகாரங்களை வேதகால மகரிஷிகள் கூறியுள்ளனர். இதில் முதன்மையானது கோயில்களில் தினமும் (அ) குறிப்பிட்ட கிழமையன்று நெய் தீபம் ஏற்றுவதாகும். வசதி இல்லாதவர்கள் நல்லெண்ணெய் தீபம் ஏற்றலாம். இதனால் சுகமான வாழ்வு அமையும்.
ஞாயிறு - இதயம், வயிறு, ரத்தம், நரம்பு சம்பந்தமான நோய்கள், நாத்திக எண்ணம், தெய்வ நிந்தனை, பெரியோரை புறக்கணித்தல், முன்னோர் வழிபாட்டை மறந்ததால் ஏற்படும் துன்பங்கள்.
திங்கள் - மனக்கவலை, மனநோய், நிம்மதியின்மை, பயம், தாழ்வு மனப்பான்மை, மனவளர்ச்சி இன்மை, சோரியாசிஸ், என்ஸிமா, வெண்புள்ளிகள் போன்ற தோல் நோய்கள்.
செவ்வாய் - பெண்களின் திருமணத் தடை, செவ்வாய் தோஷம், முன்கோபம், அவசர புத்தி, பிடிவாதம், வார்த்தையால் பிறர் மனதைப் புண்படுதல், கேதுவால் ஏற்படும் தோஷங்கள்.
புதன் - படிப்பில் தடை, ஞாபக மறதி, படிப்பில் ஆர்வமின்மை, சகவாச தோஷம், மருந்துக்கு கட்டுப்படாத நோய்கள்.
வியாழன் - ஆண்களின் திருமணத்தடை, குடும்பத்தில் மகிழ்ச்சியின்மை, புத்திர பாக்கியம், தெய்வ நம்பிக்கையின்மை, ஆச்சார்யர், குருவுக்கு துரோகம் செய்தல், பெரியோரை அவமதித்தல், குழந்தைகளால் பிரச்னை.
வெள்ளி - தாம்பத்திய சுகக் குறைவு, தம்பதி ஒற்றுமையின்மை, கடன் தொல்லை, மாங்கல்ய பலம் இன்மை, பெண்களுக்கு குடும்பத்தில் ஏற்படும் மனவேதனை.
சனி - ஆயுள், ஆரோக்கிய குறைபாடு, விபரீத நோய்கள், தொழில் பிரச்னை, பில்லி, சூனியம், செய்வினை, வேலையில் நிரந்தரமின்மை.
* ராகுவால் ஏற்படும் தோஷங்களுக்கு சனிக்கிழமையும், கேதுவால் ஏற்படும் தோஷங்களுக்கு செவ்வாய்க்கிழமையும் தீபம் ஏற்ற நன்மை கிடைக்கும்.