நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
உயிர்களுக்கு நன்மை, தீமைகளை வழங்கும் பொறுப்பு நவக்கிரகத்திற்கு உண்டு. இந்த நவக்கிரகத்திற்கு அதிபதி சூரியன். இவருக்கு கதிரவன், ஞாயிறு, பரிதி, மார்த்தாண்டன் என பல பெயர்கள் உண்டு.
ராஜகிரகமான இவர் பல நிறம் கொண்ட ஏழு குதிரைகள் இழுக்கும் ஒற்றைச் சக்கரத் தேரில் வலம் வருவதால் தான் காற்று, மழை, வெயில், பனி என பருவகாலங்கள் உண்டாகின்றன. கருடனின் தம்பியான அருணன் இவருக்கு தேர் ஓட்டுகிறார். சூரியன் தெற்கில் இருந்து வடக்கு நோக்கி பயணம் செய்யும் தை முதல் ஆனி வரையுள்ள காலத்தை உத்ராயணம் என்பர். தை அமாவாசைக்குப் பிறகு வரும் சப்தமி திதியன்று சூரியனின் தேர் வடக்கு நோக்கி திரும்புகிறது. இதையே நாம் ரதசப்தமியாக கொண்டாடுகிறோம். அன்று தேர்க்கோலம் இட்டு பொங்கல் வைத்து வழிபட்டால் ஆயுள், ஆரோக்கியம் பெருகும்.