நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விதிப்படி மார்க்கண்டேயரின் ஆயுள் பதினாறு ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்டிருந்தது. அவரது மரண நாள் வந்ததும் எமன் அவரது உயிரை பறிக்க வந்தான். அவனிடம் இருந்து தப்பிக்க, மார்க்கண்டேயர் திருநீறு பூசியபடி சிவலிங்கத்தை கைகளால் அணைத்துக் கொண்டார். ஆனாலும் எமன் விடவில்லை. காலால் உதைத்து வெளியே தள்ளினார் சிவன்.
இதன்பின் எமதுாதர்களிடம், “திருநீறு பூசியவர்களை கண்டால் விலகிச் செல்லுங்கள்” என உத்தரவிட்டான் எமன். திருநீறுக்கு காப்பு, ரட்சை என்றும் பெயருண்டு. இதற்கு 'காப்பது' என பொருள். திருநீற்றை பூசும் போது 'சிவாயநம' என்று சொல்லி பூச வேண்டும். இதனால் மனத்துாய்மை, புண்ணியம் உண்டாகும்.