ADDED : பிப் 28, 2025 08:13 AM

அரும்பு, மொட்டு, முகை, மலர், அலர், வீ, செம்மல் என அதன் பூக்களின் நிலையைப் ஏழுவகையாகப் பிரிப்பர்.
இதைப் போலவே பேதை: 5-7, பெதும்பை: 8-11, மங்கை: 12-13, மடந்தை: 14-19, அரிவை: 20-25, தெரிவை: 26-31, பேரிளம்பெண்: 32-40 என வயதின் அடிப்படையில் பெண்களை ஏழாக பிரிப்பர். இதில் திருமணத்திற்கு ஏற்ற பருவம் அரிவை. அதாவது 25 வயதிற்குள் திருமணம் நடத்த வேண்டும்.
இக்காலத்தில் இளம் பெண்கள் நல்ல வேலைக்கு போக வேண்டும். வெளிநாட்டிற்குப் போய் நிறைய சம்பாதிக்க வேண்டும் என பணத்தை மட்டும் சிந்திக்கிறார்கள். திருமண முயற்சியில் பெற்றோர் ஈடுபட்டாலும் அதை தவிர்க்கவே விரும்புகிறார்கள். நல்ல வரன் வலிய தேடி வந்தாலும் சாக்கு போக்கு சொல்லி மறுக்கிறார்கள். இதனால் பெற்றோர் படும் வேதனையை சொல்லி மாளாது. இந்நிலை மாறி திருமணம் நடக்க துளசி வழிபாடு துணை செய்யும்.
முன்பு வீடுகளில் உள்ள துளசி மாடத்தில் செவ்வாய், வெள்ளி, பவுர்ணமியன்று பெண்கள் துளசிபூஜை செய்வர்.
மகாலட்சுமியின் வடிவமான துளசியை வழிபடுவோருக்கு திருமண யோகம் உண்டாகும். உடல், உள்ளத் துாய்மையுடன் கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்லி வழிபட்டால் விரைவில் உங்கள் வீட்டில் மேளச்சத்தம் ஒலிக்கும்.
சென்னை குன்றத்துார் கல்யாண வரம் தரும் காத்யாயனி அம்மன் கோயிலில் துளசி வழிபாடு நடக்கிறது.
“ப்ருந்தா ப்ருந்தாவணி விச்வ பூகிதா விச்வபவானி
புஷ்ப ஸாரா நந்தநீச துளசி கிருஷ்ண ஜீவினி
ஏதத நாமாஷ்டகம் சைவ ஸ்தோத்திரம்
நமார்த்த ஸம்யுக்தம் ய:
படேத் தாம்ச சம்பூஜிய
சோச்வமேத பலன் லபேத்”
பொருள்: பிருந்தாதேவியை நான் பூஜிக்கிறேன். பிருந்தாவணியை நான் பூஜிக்கிறேன். விச்வ பூஜிதாவை நான் பூஜிக்கிறேன். விச்வபவானியை நான் பூஜிக்கிறேன். புஷ்பஸாராவை நான் பூஜிக்கிறேன்.
நந்தினியை நான் பூஜிக்கிறேன். கிருஷ்ணவேணியை நான் பூஜிக்கிறேன். துளசியை நான் பூஜிக்கிறேன்.