
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பொள்ளாச்சியில் இருந்து 14 கி.மீ., தொலைவிலுள்ள தலம் ஆனைமலை. இங்கு கோயில் கொண்டிருக்கும் மாசாணியம்மன் அநீதியை தட்டிக் கேட்கும் நீதிதெய்வமாக இருக்கிறாள். செவ்வாய், வெள்ளி, அமாவாசையன்று வழிபடுவது சிறப்பு.
அநியாயம், நம்பிக்கை துரோகம், திருட்டு, ஏமாற்றுதல், எதிரி தொல்லை போன்ற பிரச்னைக்கு தீர்வு கிடைக்க இங்குள்ள நீதிக்கல்லில் மிளகாய் அரைத்துப் பூசி வழிபடுகின்றனர். நிவாரணம் கிடைத்ததும் அம்மனை குளிர்விக்க எண்ணெய்க்காப்பு வழிபாடு செய்வர்.