
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கம்பர் ராமாயணத்தை ஸ்ரீரங்கம் கோயிலில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார். அதற்காக வைணவ ஆச்சார்யரான நாதமுனிகளிடம் அனுமதி பெற்றார்.
ஒரு நல்ல நாளில் பண்டிதர்கள் முன்னிலையில் அரங்கேற்ற முயன்ற போது, தடங்கல் ஏற்பட்டது. அன்றிரவு கனவில் தோன்றிய ரங்கநாதர், ''கம்பரே! எம்மைப் பாடினாய்; ஆனால் நம் சடகோபனை (நம்மாழ்வார்) பாடவில்லையே? அவனையும் பாடினால் தான் ராமாயணத்தை ஏற்போம்'' என வேண்டுகோள் விடுத்தார். நம்மாழ்வார் மீது 'சடகோபர் அந்தாதி' என்னும் நுாறு பாடல்களைக் கம்பர் பாடிய பின்னர் அரங்கேற்றம் நிகழ்ந்தது.

