
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அருள்வித்தகர் என்ற அந்தணர் ஒருநாள் பூக்கூடையுடன் காவிரியாற்றின் குறுக்கே சென்று கொண்டிருந்தார். அப்போது ஆற்றில் நீர்வரத்து அதிகமாக இருந்தது. அவரைக் காப்பாற்ற துறவி வடிவில் தோன்றிய சிவபெருமான், படித்துறையைக் காட்டி அந்தணரை கரையேறச் செய்ததோடு உபதேசமும் செய்தார். இதன் அடிப்படையில் சிவனுக்கு கோயில் எழுப்பப்பட்டது.
மயிலாடுதுறை - சிதம்பரம் சாலையிலுள்ள விளநகர் என்னும் இடத்தில் இக்கோயில் உள்ளது. சுவாமிக்கு 'துறை காட்டும் வள்ளல்' என்பது திருநாமம். அம்மன் 'வேயுறு தோளியம்மை' எனப்படுகிறாள். 'மூங்கில் போல வளைந்த தோள்களை கொண்டவள்' என பொருள்.