நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
விளக்கேற்றும் போது கீழ்க்கண்ட ஸ்லோகத்தை படியுங்கள். சிரமம் இருப்பின் அதற்குரிய பொருளை படிக்கலாம்.
வாழும் காலத்தில் பணம், புகழ், செல்வாக்கும், வாழ்வுக்குப் பின் சொர்க்கமும் கிடைக்கும்.
கீடா: பதங்கா :மசகாச்ச வ்ருக்ஷா:
ஜலே ஸ்தலே யே நிவஸந்தி ஜீவா:!
த்ருஷ்ட்வா ப்ரதீபம் ந ச ஜன்ம பாஜா
பவந்தி நித்யம் ச்வபசா ஹி விப்ரா:!!
புழு, பறவை, மரம் என பூமியில் எத்தனை வகையான ஜீவராசிகள் வாழ்கிறதோ அனைத்தும் இந்த தீபத்தைப் பார்த்து விட்டால் அதனுடைய எல்லா பாவங்களும் நிவர்த்தியாகட்டும். இன்னொரு பிறவி எடுக்காமல் பரமானந்த வடிவமான கடவுளுடன் சேரட்டும்.