
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊனாய் உயிராய் உணர்வாய் என் உள் கலந்து
தேனாய் அமுதமுமாய்க் தீங்கரும்பின் கட்டியுமாய்
வானோர் அறியா வழி எமக்குத் தந்தருளும்
தேனார் மலர்க் கொன்றைச் சேவகனார் சீர்ஒளிசேர்
ஆனா அறிவாய் அளவிறந்த பல் உயிர்க்கும்
கோனாகி நின்றவா கூறுதும் காண் அம்மானாய்.
உடலாக, உயிராக, உணர்வாக என்னுள்ளே கலந்திருக்கிறான் சிவபெருமான். அவனை நினைத்தால் தேனாய், அமுதமாய், வெல்லமாய் தித்திக்கும். தேவர்களும் அறியமுடியாத ஞானத்தை அன்புடன் எனக்கு கொடுத்தான். தேன் சிந்தும் கொன்றைப் பூக்களைத் தலையில் சூடிய அப்பெருமான், நம்மைச் செம்மைப்படுத்தும் அறிவுப் பொருளாக இருக்கிறான். உயிர்கள் அனைத்திற்கும் தலைவனாக இருக்கும் அப்பெருமானைப் போற்றி ஆடிப் பாடுவோம் என்கிறார் மாணிக்கவாசகர்.