
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பிறருக்கு கொடுப்பதில் தானம், தர்மம் என இருவகை உண்டு. தன்னை விட, மேலான தகுதி கொண்டவருக்கு அளிப்பது தானம். தன்னை விட தகுதி குறைந்தவருக்கு கொடுப்பது தர்மம். பணம், உடை, பொன், பூமி, வீடு, பசுக்கள் என எவ்வளவு கொடுத்தாலும் பெறுபவர் வேண்டாம் என மறுப்பதில்லை.
ஆனால் சாப்பாட்டில் அலாதி ஆசை உள்ளவர் கூட, வயிறு நிறைந்ததும் 'போதும்' என சொல்லி விடுவர். உண்பவர் 'போதும்' எனச் சொல்லும் போது தானத்திற்குரிய பலன் முழுமையாக கிடைத்து விடும். இதனால் அன்னதானமே சிறந்தது என்பர்.