
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வெள்ளியன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் இழந்த பொருளை மீண்டும் பெறலாம். ஐப்பசி மாதம் முதல் வெள்ளியன்று தொடங்கி வாரந்தோறும் மூன்றாண்டு தொடர வேண்டும். இதனை 'கந்த சுக்கிர வார விரதம்' எனச் சொல்வர்.
விரதமிருப்பவர்கள் வெள்ளியன்று காலையில் விளக்கேற்றி கந்தசஷ்டிக் கவசம், சண்முக கவசம், கந்த குருகவசம் பாடல்களைப் பாடுவது நல்லது. மதியம் ஒருவேளை உணவும், இரவு பால், பழம் மட்டும் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.
இரவு முருகன் கோயிலில் விளக்கேற்றுவது அவசியம். பார்க்கவ முனிவரின் ஆலோசனையின் படி மூன்றாண்டு விரதமிருந்த பகீரதன் ஆகாய கங்கையை பூமிக்கு வரவழைத்தார்.