நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சவுராஷ்டிர நாட்டின் ராணியான சுசந்திராவிடம் ஏராளமான செல்வம் இருந்தது. செல்வத்திற்கு அதிபதியான மகாலட்சுமியை விட தானே பெரியவள் என ஆணவத்துடன் செயல்பட்டாள். அவளை ஏழையாக்கினாள் மகாலட்சுமி. அவளின் மகளான சாருமதி தன் தாயைக் கண்டு வருந்தினாள்.
மகாலட்சுமியிடம் மன்னிப்பு கேட்டு வரலட்சுமி விரதம் இருந்தாள். அதில் மகளுடன் சேர்ந்து சுசந்திராவும் பங்கேற்றாள். கருணைக்கடலான மகாலட்சுமி மீண்டும் இழந்த செல்வத்தை வழங்கினாள்.